விக்ரமை நேரில் சந்தித்த லியோ தாஸ்; தீயாய் பரவும் புகைப்படம் – அடுத்த எல்சியூ ரெடி.!

நேற்றைய தினம் கமலின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துக்களை பகிர்ந்து வந்தனர். மேலும் நேற்று கமலின் பிறந்தநாள் பார்ட்டியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன்போது இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோரும் இந்த பார்ட்டியில் கலந்துக்கொண்டு கமலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனிடையில் கமலுடன் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய்யும் கலந்துக்கொண்டாரா? என கேட்டு வந்தனர். ஆனால் இந்த புகைப்படம் நேற்றைய தினம் எடுக்கப்பட்டதில்லை. மாறாக இந்த போட்டோ ‘லியோ’ படத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக கமலுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இந்த போட்டோ ‘லியோ’ படத்தின் டப்பிங் பணிகளின் போது எடுக்கப்பட்டது. கடந்த மாதம் வெளியான இப்படத்தை எல்சியூ பாணியில் இயக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். அதன்படி லியோவில் ‘விக்ரம்’ கமலின் வாய்ஸ் இருப்பதை போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக கமல் டப்பிங் பேசிய சமயத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டோவை ஏஜென்ட் விக்ரமை சந்தித்த லியோ தாஸ் எனக்கூறி இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். எல்சியூவின் கீழ் இவர்கள் இருவரையும் வைத்து ‘லியோ’ இரண்டாம் பாகம் அல்லது ‘விக்ரம் 2’ படத்தை இயக்கினால் தீயாய் இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience