சென்னையில் துவங்கிய கங்குவா பட இறுதிக்கட்ட சூட்டிங்…!!

நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் கங்குவா. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடந்த நிலையில் தொடர்ந்து தாய்லாந்திலும் நடத்தப்பட்டது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாகியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத், சிங்கம் படத்திற்கு பிறகு சூர்யாவுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் படத்தின் பாடல்கள், பிஜிஎம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் இன்றைய தினம் சென்னையில் துவங்கியுள்ளது. ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த சூட்டிங் இன்றைய தினம் துவங்கியுள்ளது. இதில் சூர்யா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஷெட்யூலுடன் சூர்யாவின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிடும் என்றும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதி வரை இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சூர்யாவின் போர்ஷன்கள் நிறைவு செய்யப்பட்டாலும் படத்தின் பேட்ச் வேலைகள் சில மீதமுள்ளதாகவும் டிசம்பர் மாதத்தில் அது நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. படம் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience