நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, சமுத்திரக்கனிக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரு. மாணிக்கம் ‘எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர் ,சின்னி ஜெயந்த் ,வடிவுக்கரசி ,கருணாகரன், சுலீல் குமார், கிரேஸி, சந்துரு , சாம்ஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஜிபி ஆர் கே சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜி பி ரேகா ரவிக்குமார் , சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி , ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இம்மாதம் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மலையும் மலை சார்ந்த பகுதியில் வாழும் மாணிக்கம் எனும் தனி மனிதரின் வாழ்வியல் சார்ந்த படைப்பாக உருவாகி இருப்பதாலும் காட்சிகள் உணர்வுபூர்வமாகவும், மனித நேயத்தை மையமாகக் கொண்டிருப்பதாலும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்!

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி , அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் லட்சுமணனாக நடிப்பது யார் என்பது ரசிகர்களிடம்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience