கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார்.

39 வயதான குறித்த பெண் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்ததுடன் அவரது மகன் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் நடிகர் அல்லு அர்ஜூனும் குறித்த திரையரங்குக்குச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

இந்தநிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்பு குழுவினர் மற்றும் சம்பவம் இடம்பெற்ற திரையரங்கின் நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பின்னர் மேல் நீதிமன்றினால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், திரையரங்குக்கு வருவது தொடர்பில் அவர், தங்களுக்கு அறிவிக்கவில்லை என திரையரங்கத்தின் நிர்வாகத்தினர் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

Related News

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More
பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்!

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி , அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் லட்சுமணனாக நடிப்பது யார் என்பது ரசிகர்களிடம்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience