மாயாவின் கேப்டன்ஸியில் தொடரும் பிரச்சனைகள் – பிரதீப்பை விரட்டிய மாயாவுக்கு பிக் பாஸே ஸ்கெட்ச் போடுறாரோ?

பிக் பாஸ் 7 வீட்டின் இந்த வார கேப்டன் மாயா. கேப்டன் ஆனதில் இருந்து மாயா ஓவராக நடந்து கொள்வதாக சக போட்டியாளர்களும், பார்வையாளர்களும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் ப்ரொமோ வீடியோவில் மாயா தான் அட்டகாசம் செய்திருக்கிறார்.

ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் டூத்பிரஷ்ஷை எடுத்து வைத்துக் கொண்டார் மாயா. இதையடுத்து மாயா டூத்பிரஷ் கொடுங்க, காலையில் அது வேணும்ல என விசித்ரா கேட்டதற்கு டீ போடுங்கனு கெத்தாக சொன்னார் மாயா.

இதையடுத்து மாயாவின் கேப்டன்ஸியில் தொடரும் பிரச்சனைகள் என பிக் பாஸ் ஒரு பக்கம் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். பிரஷ் கிடைக்காத தினேஷோ நீங்க இரண்டு ஹவுஸுக்கும் தான் கேப்டன் என மாயாவிடம் கூறினார். அதற்கு மாயாவோ, கை இருக்குல, கையில தேச்சுக்க சொல்லுங்க என்றார்.

இதையடுத்து ஸ்மால் பாஸ் இல்ல போட்டியாளர்களை வஞ்சிக்கிறாரா மாயா என பிக் பாஸின் குரல் கேட்டது. மாயா செய்வது சரியில்லை என்பது உங்களுக்கே தெரியுதுல பிக் பாஸ். அப்புறம் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள் பார்வையாளர்கள்.

மாயாவின் கேப்டன்ஸி சரியில்லை என விஜே அர்ச்சனா சொல்ல, ஆமாங்க என்றார் மாயா. இதையடுத்து பரபரப்பான நிகழ்வுகளின் முடிவு என்ன என்று மீண்டும் பிக் பாஸ் வந்து வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார்.

நீங்க உள்ளே வாங்க என மாயா கூப்பிட நீ சொல்லிலாம் வர முடியாது போ என்பது போன்று கையை அசைத்தார் அர்ச்சனா. அத்துடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

பிரதீப் மீது அநியாயமாக பழி சுமத்தி வெளியே அனுப்பிய பாவம் சும்மா விடுமா? இந்தா பிக் பாஸை உங்களுக்கு ஆப்பு வைப்பது போன்று தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார்.

யார் கண்டது, வெளியே நாங்கள் தொடர்ந்து திட்டுவதை பார்த்து இந்த வாரம் உங்களை தான் எலிமினேட் பண்ணினாலும் பண்ணுவார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாரையும் உங்களுக்கு பிடிக்கவில்லை. பூர்ணிமாவை தவிர வேறு யாருக்கும் உங்களை பிடிக்கவில்லை.

இந்நிலையில் அவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே இருக்க வேண்டாம் மாயா. கெளம்பிடுங்க, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீடு நல்லா இருக்கும். ஆண் போட்டியாளர்களும் நிம்மதியாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!