கமல் செய்தது தவறுதான் – பிரதீப்புக்கு சப்போர்ட்டாக களமிறங்கிய அசீம்…!!

பிக்பாஸ் சீசன் 7 ரகளையாக சென்றுகொண்டிருக்கிறது. யாரும் பெரிதான பிரபலம் இல்லாததால் இந்த சீசன் கண்டிப்பாக போர் அடிக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில் அதற்கு நேர் மாறாக நடக்கிறது வீட்டில்.

இந்நிலையில் இந்த சீசனின் ஹாட் டாபிக்காக இருந்த பிரதீப் மீது ஹவுஸ்மேட்ஸ் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அதன்படி அவர் வீட்டில் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறியதால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

அடுத்ததாக அன்னபாரதி எலிமினேஷன் செய்யப்பட்டார். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். அதிலும் கமல் மீது கடும் விமர்சனத்தை முன் வைக்கின்றனர் நெட்டிசன்கள். முக்கியமாக பிரதீப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற அடிப்படையில் கமல் முடிவெடுத்திருக்கிறார். ஆனால் வீட்டுக்குள் இருக்கும் நிக்சனும்தான் எல்லை மீறுகிறார். ஆனால் அவரை வீட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். கமல் ஹாசன் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் பக்குவமாக நடந்திருக்க வேண்டும். பிரதீப்புக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும் என கூறினர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னரான அசீம், பிரதீப் விவகாரம் குறித்து அளித்த சமீபத்திய பேட்டியில், “பிரதீப் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கமல் ஹாசன் சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை நான் நியாயமாக பார்க்கவில்லை. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு என்று காரணம் சொல்லி கொடுத்தது தவறு. அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience