பிரதீப்பிற்கு நடந்த அநீதியை பேசிய விசித்ரா, அர்ச்சனா – கொந்தளிப்பில் மாயா மற்றும் பூர்ணிமா..!!

பிக்பாஸ் வீட்டில் சனிக்கிழமை எபிசோடில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைச்சல் எனக்கூறி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் பிரதீப். பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன் சீசன் போட்டியாளர்கள் பலரும், பிக் பாஸ் விமர்சகர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்றைய எபிசோடிற்காண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஸ்மால் பாஸ் வீட்டில் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ் என பிரதீப் இருக்கட்டும் என கூறியவர்களும் ரவீனா, மணி ஆகியோரையும் அனுப்பியிருக்கிறார் கேப்டன் மாயா.

மற்ற அனைவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். அந்த வகையில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர், ரெட் கார்ட் எவிக்ஷன் என்பது கூட்டமாக சேர்ந்து திட்டமிட்டு நடந்ததாகவும், கூல் சுரேஷ் விஷயத்தை மாற்றி பிரதீப் மீது இப்படி ஒரு பழி சுமத்தியதாகவும் காரணம் கூற, அந்த காரணத்தை பிக் பாஸ் கூறி பத்த வைத்துவிட்டார்.

அதனை எதிர்த்து கேள்வி எழுப்ப வந்த மாயா மற்றும் பூர்ணிமாவை வச்சு செய்துவிட்டார் அர்ச்சனா. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒரு ஆண்மீது பழி போடுவது என்பது மிகவும் பவரானது. இந்த அபாண்டமான பழியை மனசாட்சி பிரகாரம் செய்திருந்தீர்கள் என்றால் தவறில்லை. ஆனால் ஒரு மனிதரின் வாழ்க்கையை சீர்குலைத்து விட்டீர்கள் என அர்ச்சனா பேசியது மக்கள் மனதில் ஓடும் விஷயத்தை அப்படியே பேசியது போல இருக்கிறது.

பிரதீபின் எவிக்ஷனில் விருப்பம் இல்லாத விசித்ரா, கூல் சுரேஷ், அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டதும் திட்டம் தான் என இந்த ப்ரோமோவை வைத்து தெரிகிறது.

ஆக மொத்தத்தில் பிரதீப் வீட்டிற்குள் இருந்தாலும் கன்டென்ட் கிடைக்கிறது. வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவரின் பெயரைச் சொல்லி கன்டென்ட் கிடைக்கிறது என்பதுதான் உண்மை.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!