சூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபலம் – வெற்றிமாறன் கொடுத்த வாடிவாசல் அப்டேட்…!!!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா, பான் இந்தியா படமாக 10 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. வழக்கமாக தனுஷுடன் இணையும் வெற்றிமாறன், முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி வைத்தார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக வைத்து செம்ம மிரட்டலாக உருவாகவிருந்தது வாடிவாசல். இதற்காக சூர்யா தான் வளர்க்கும் காளையுடன் ஜல்லிக்கட்டு பயிற்சி எடுத்து வந்தார். இன்னொரு பக்கம் கங்குவா படத்திலும் கவனம் செலுத்தினார். இதனால் கங்குவா ஷூட்டிங் முடிந்ததும் வாடிவாசல் தொடங்கப்படும் என சொல்லப்பட்டது.

ஆனால் சூர்யாவால் இன்னும் கங்குவா படப்பிடிப்பில் இருந்து வெளிவர முடியவில்லை. அதேபோல் வெற்றிமாறனும் விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஒருகட்டத்தில் வாடிவாசல் ட்ராப் ஆகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி எஸ் தாணு மூவருமே வாடிவாசல் கண்டிப்பாக உருவாகும் என தெரிவித்தனர்.

இதனிடையே கங்குவாவை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா. இதனால் மீண்டும் வாடிவாசல் திரைப்படம் ட்ராப் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது உண்மையில்லை என சொல்லும் விதமாக தற்போது தரமான அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.

அதாவது வாடிவாசல் படத்தில் இயக்குநர் அமீர் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். வடசென்னை படப்பிடிப்பின் போதே அமீரை வாடிவாசலில் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பல வருடங்களுக்குப் பின்னர் சூர்யா – அமீர் இருவரும் மீண்டும் இணையவுள்ளனர்.

அமீர் முதலில் இயக்கிய மெளனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக அறிமுகமானதும் குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற மெளனம் பேசியதே, இப்போதும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் மீண்டும் இணையாத சூர்யா – அமீர் கூட்டணி, விரைவில் வாடிவாசல் படத்தில் இணைகிறது.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience