விடாமுயற்சியில் அர்ஜூன் – மறைமுகமாக உறுதி செய்த த்ரிஷா..!!!

லியோ படத்தை அடுத்து தற்போது நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார் த்ரிஷா. அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. தொடர்ந்து துபாய், சென்னை போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்த கட்டங்களில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 1ம் திகதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார் த்ரிஷா.

இந்த நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, நடிகர் அர்ஜூன் குறித்தும் பேசினார். விரைவில் அர்ஜூனுடன் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்து ரசிகர்களுக்கு தெரியவரும் என்றும் த்ரிஷா குறிப்பிட்டிருந்தார். முன்னதாக அஜித்துடன் த்ரிஷா மற்றும் அர்ஜூன் இருவரும் மங்காத்தா படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், மீண்டும் அவருடன் இணையவுள்ளது குறித்து த்ரிஷா பேசியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் த்ரிஷா. மீண்டும் கமலுடன் KH234 படத்தில் இவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இவர்களது காம்பினேஷனில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தன்னுடைய படங்களில் நாயகன் -நாயகியின் கெமிஸ்ட்ரியை சிறப்பாக காட்டும் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கவுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிமுக வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience