பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார்!

இந்தியா, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.

இதனடிப்படையில் மக்களவையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், மாநிலங்களவையில் சோனியா காந்தியும் எம்.பி.க்களாக உள்ளனர்.

அதேபோல் நாட்டு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸின் ரவீந்திர வசந்த்ராவ் சவானும் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.

கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்தார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

பதவிப்பிரமாணம் செய்த பிரியங்கா காந்தி தனது நன்றி உரையின் போது, “எனது அன்புக்குரிய வயநாடு சகோதர, சகோதரிகளே! என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் நான் நன்றியில் முழ்கித் திழைக்கிறேன். காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக நான் உணரச் செய்வேன். உங்களை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்து கொண்டவர், உங்களில் ஒருவராக உங்களுக்காக போராடுகிறார் என்பதையும் உணரச் செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். இந்த மரியாதையை நீங்கள் எனக்கு அளித்ததற்கும், நீங்கள் எனக்கு அளித்த அளவு இல்லாத அன்புக்கும் நன்றி.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  • Related News

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிசாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை…

    Read More
    தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலி!

    தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பரவிய நிலையில் 6 பேரை மருத்துவமனைக்கு கொண்டு…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Bonus Terms and Conditions

    Is Playing Online Poker in the UK Safe?

    How to Get Signed Up to the Best Online Casinos in the UK

    Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

    Sensible Medical insurance Preparations

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience