தளபதி 68 இல் ‘மங்காத்தா’ வைப்; மாஸ் தகவலா இருக்கே – சம்பவம் கன்பார்ம்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘லியோ’ படம் வெளியானது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் விஜய்.

இந்நிலையில் ‘லியோ’ ரிலீசான நாளில் இருந்த ‘தளபதி 68’ படம் குறித்த அப்டேட்கள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அஜித்தை ‘மங்காத்தா’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வைத்து அதகளம் செய்திருந்தார் வெங்கட் பிரபு. அஜித்தை தொடர்ந்து தற்போது விஜய்யை அவர் இயக்கவுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

அண்மையில் இப்படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் துவங்கியது. முதல் அப்டேட்டாக இந்த பூஜை வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர். அந்த வீடியோயில் ஜெயராம், மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், விடிவி கணேஷ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். மற்றும் நாயகிகளான சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோரும் இந்த பூஜையில் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் அண்மையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் ‘தளபதி 68’ படத்தில் மங்காத்தா பின்னணி இசை போல் எதிர்பார்க்கலாமா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் நிச்சயமாக அப்படி ஒன்றை ‘தளபதி 68’ படத்தில் எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

‘மங்காத்தா’ படத்தின் பின்னணி இசை இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘தளபதி 68’ படத்தில் விஜய் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience