குருவுக்கு வில்லனான சிஷ்யன் – லோகி செய்திருக்கும் தரமான சம்பவம்…!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயுடன் இணைந்து லியோ எனும் மாபெரும் வெற்றி படத்தை சமீபத்தில் கொடுத்தார். லியோ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டாருடன் இணைந்து தலைவர் 171வது படத்தில் பணியாற்றி வருகிறார்.

தலைவர் 171 படம் LCUவாக இல்லாமல் தனி படமாக இருக்கும் என தகவல் வெளியானது. படத்தின் வேலைகளும் நடந்துவருவதாக லோகேஷ் சமீபத்திய நேர்காணல்களில் கூறியிருந்தார். தற்போது தலைவர் 171 படத்தின் வில்லன் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா நடித்திருந்த விக்ரம் படம் வெளியானது. விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று கமல்ஹாசனுக்கு ஒரு கம்பேக் படமாக இருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சந்தனம் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். லோகேஷ் கனகராஜ் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்திருந்தாராம்.

ஆனால் சில காரணங்களால் ராகவா லாரன்ஸ் மாஸ்டரால் சந்தனம் ரோலில் நடிக்க முடியவில்லை. அதனால் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறாராம் ராகவா லாரன்ஸ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் என சொல்வதை விட மாபெரும் பக்தர் என்று தான் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சொல்ல வேண்டும். ராகவா லாரன்ஸ் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார். அதன்பிறகு அதிகாரம் என்னும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தலைவர் 171 படத்தில் குருவுக்கு வில்லனாக நடிக்கிறார் சிஷ்யன் ராகவா லாரன்ஸ்.

தலைவர் 170 படத்தில் பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு இந்த படத்தில் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ஆரம்பமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience