காதலியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம் – மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு நடிகர் தான் ஜெயராம். 90களில் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய மகன் காளிதாஸும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

காளிதாஸ் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தமிழில் வெளியான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் உலக நாயகன் கமல் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் காளிதாஸிற்கு அவருடைய காதலியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மாடல் அழகியான தாரிணி காளிங்கராயர் என்பவரை காதலித்து வந்த நிலையில், அவருடன் நேற்றைய தினம் காளிதாஸுக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

தாரிணி 2019 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றார் என கூறப்படுகிறது. மாடலாக மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோனுடன் இணைந்து விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம், தாரிணி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிகழ்வில் திரையுலகை சார்ந்த பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வர, ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience