என்ன கீழ இருந்து மேல பார்க்குறான் – மாயாவுக்கும் பிராவோவுக்கும் இடையே வெடித்த மோதல்…!!

பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுக்கு தெரியாமல் பேசியதை எல்லாம் இன்று எக்ஸ்போஸ் செய்துவிட்டார்கள். யார் பேசினார் என்பதை சொல்லாமல் ஸ்டேட்மென்ட் வர அதை பேசியவர் தானாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும். அது தான் இன்றைய டாஸ்க்.

முன்னதாக பிரதீப் ஆண்டனி பாத்ரூமை திறந்து போட்டு அசிங்கம் பண்ணாரு என்றும் ரவீனா தாஹாவின் அண்ணாக்கயிறு பற்றி கமெண்ட் அடித்தார் என்றும் ஐஷுவை கட்டிப்பிடிப்பது போல கேவலமா சிக்னல் கொடுத்தாரு என அவரை கேரக்டர் அசாசினேஷன் செய்து மாயா, பூர்ணிமா, ஐஷு மற்றும் ஜோவிகா காதல் மன்னன் நிக்சன் உடன் இணைந்துக் கொண்டு வெளியே துரத்தி விட்டனர் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், அதை விட மோசமாக புதிதாக வந்த ஆர்ஜே பிராவோ தன்னை கீழ இருந்து மேல பார்க்கிறான் என பிக் பாஸிடம் மாயா சொன்னதை வெளிப்படையாக திரையில் காண்பிக்க, மாயாவுக்கும் பிராவோவுக்கும் சண்டை வெடித்துள்ளது.

கூடவே ஆம்பளையே இல்லை என ஜோவிகா தினேஷை பார்த்து சொன்ன வார்த்தையால் கடுப்பான அவரும் கோதாவில் குதித்துள்ளார். இந்த சீசனில் மாயா ஆரம்பத்தில் இருந்தே கூல் சுரேஷ் தப்பா பார்த்தாரு, பிரதீப் தப்பா பார்த்தாரு, இப்போ பிராவோ தப்பா பார்க்குறாருன்னு சொல்லியே ஒவ்வொருத்தராக காலி செய்து வருகிறாரா என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

மாயாவை புதுசா அந்த ஆர்ஜே பிராவோ கீழ இருந்து மேல பார்க்குறான் என கீழ்த்தரமாக பேசி அடுத்து அவனையும் பெண்களுக்கு எதிரான போட்டியாளர் என வெளியே அனுப்பிவிட மாயா திட்டம் போட்டு விட்டாரா என்றும் மனசாட்சியே இல்லாமல் இப்படி ஆண் போட்டியாளர்களை உமன் கார்டு பயன்படுத்தி கமல் கொடுத்த சப்போர்ட்டை வைத்துக் கொண்டு மாயா செய்வது எல்லாம் ரொம்ப டூமச் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

ஏங்க உங்கள அவன் ஸ்கேன் பண்ற மாதிரி கீழ இருந்து மேல பார்த்தானா என கேட்டதும், கேரக்டர் அசாஸினேஷன் பண்ணாதீங்க என மாயா சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. நீங்க தாங்க அவனை காலி பண்ணியிருக்கீங்க என தினேஷ் எகிற விஜே பிராவோவும் மாயாவிடம் சண்டை போட ஆரம்பித்துள்ளார்.

இது பிக் பாஸ் நிகழ்ச்சி தானா அல்லது வேற ஏதாவது ஷோவா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். பெண் போட்டியாளர்கள் இந்த சீசனில் இந்த ஒரு விஷயத்தை வைத்தே ஓட்ட முடிவு செய்து விட்டது ரொம்பவே மோசம் எல்லாம் கமல் கொடுத்த இடம் தான் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!