ஃபேமிலி படம்’ எனும் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு!

தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் ‘ஃபேமிலி படம்’ திரைப்படம் மற்றும் அதில் இடம்பெற்ற பாடல்களான ‘நெசமா..’ மற்றும் ‘கால் பாதம் இதுவா…’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தின் கதாநாயகன் உதய் கார்த்திக், ‘டை நோ சர்ஸ்’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். அவருடன் இணைந்து பல திறமையான நடிகர்கள், உட்பட விவேக் பிரசன்னா, சுபிக்ஷா காயரோகனம், பார்த்திபன் குமார், மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், படக்குழுவின் கலைதிறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிவீ இசையமைக்க, அஹ்மத் ஷ்யாம் எழுதிய பாடலின் வரிகள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, பாடல் காட்சிகளின் ஒளிப்பதிவு மற்றும் பின்புல இசை சிறப்பாக அமைந்துள்ளதால், பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது யுகே கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி முடிந்துள்ள இப்படம், வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. படத்தின் பாடல்களும், லிரிக்கல் வீடியோக்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தி இருக்கின்றன. இது தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • Related News

    கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

    திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

    Read More
    நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

    தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!