போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்…!!!

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் திகதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஒருமாதத்தை கடந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நடைபெற்று வருகிறது.

போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால், காசா மற்றும் இஸ்ரேல் என இரு இடங்களிலுமே பதற்றம் நிறைந்தே காணப்படுகிறது. இதனிடையே, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று அமெரிக்கா கூறி வருகிறது. கசாவை சுற்றி வளைத்து இருக்கும் இஸ்ரேலின் அடுத்த கட்ட மூவ் என்ன என்பதை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளே உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவை ஆக்கிரமிக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு மேலும் கூறுகையில், காசாவை நிர்வகிக்கும் எண்ணமோ ஆக்கிரமிக்கும் எண்ணமோ எங்களிடம் இல்லை. காசாவிற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க நினைக்கிறோம். முடக்கப்பட்டுள்ள அந்த பிராந்தியத்தை அனைத்து படைகளையும் வெளியேற்றிவிட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். காசாவில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். சிவில் அரசாங்கத்தை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்றார்.

எனினும், அரசாங்கத்தை யார் அமைப்பார்கள் என்பது குறித்து தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. முன்னதாக கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்னி பிளிங்கன், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் குறித்து பேசுகையில், காசா முனையில் கட்டுப்பாட்டை பாலஸ்தீனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Related News

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிசாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை…

Read More
தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலி!

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பரவிய நிலையில் 6 பேரை மருத்துவமனைக்கு கொண்டு…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

BillyBets pt e a nova era das apostas que desafiam limites