கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட்ட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தம்மிட்ட மகேவிட பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

Read More
எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

BillyBets pt e a nova era das apostas que desafiam limites