உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரும் தனியார் நிறுவனங்கள்!

நாட்டில், உள்நாட்டு உற்பத்தியில் உள்ள சவால்களை காரணம் காட்டி, உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரி, சில தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக வர்த்தக மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் உள்ளூர் உப்பு உற்பத்தியை பாதிக்கும் நடைமுறை சிக்கல்களால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தநிலையில், தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆர்.எம். லங்கா சோட் லிமிடெட்டின் பொது முகாமையாளர் குணரத்ன இது தொடர்பில் தகவல் தந்துள்ளார்.

நாட்டில் தற்போது 12 மெட்ரிக் தொன் உப்பு இருப்பு உள்ளது, இது அடுத்த இரண்டு மாதங்களுக்கு நுகர்வு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது.எவ்வாறாயினும், பாதகமான காலநிலை காரணமாக உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பதற்காக, உப்பை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாக குணரத்ன கூறியுள்ளார்.
தற்போது போதிய கையிருப்பு உள்ள நிலையில், உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் சில வியாபாரிகள் விலையை உயர்த்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

Read More
எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

BillyBets pt e a nova era das apostas que desafiam limites