இலங்கையில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்கள் – பொலிஸார் எச்சரிக்கை…!!

இலங்கைக்கு சுற்றுலா விசாவின் மூலம் வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது நிகழ்கின்ற இணையக்குற்றங்களில் வெளிநாட்டவர்களது ஈடுபாடு அதிகரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒன்லைன் மூலமான நிதி மோசடி, தனி நபர்களின் தரவுகளைத் திருடுதல் மற்றும் இணைய வர்த்தக மோசடிகள், போன்ற குற்றங்களில் இலங்கையில் சுமார் 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல தூதரகங்களில் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில வெளிநாட்டு பிரஜைகள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து பல மில்லியன் ரூபாவை இணையத்தின் ஊடாக மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே இவ்வாறான குற்றங்களைத் தடுத்து, இந்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

Read More
எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!