இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் உடல் நாட்டை வந்தடைந்தது – கண்ணீரில் மனைவி பிள்ளைகள்…!!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கை பிரஜையான சுஜித் யடவர பண்டாரவின் உடல் நாட்டுக்கு வந்துள்ளது.

அவரின் உடலம் இன்று (9) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இஸ்ரேலில் இருந்து துபாய் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இன்று காலை 08.37 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சுஜித் யடவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி மற்றும் பலர் சடலத்தை பெற்றுக் கொண்டனர்.

சுஜித் யடவர பண்டாரவின் இறுதிக் கிரியைகள் வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Related News

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

Read More
எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience