போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பேர்த் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடவுள்ளதால் இத் தொடர் மக்கள் மத்தியிலும் விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.

இந்தப் போட்டியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் அணித் தலைவர்களாக விளையாடுவது விசேட அம்சமாகும்.

தனது மனைவி இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதால் மனைவிக்கு துணையாக சில நாட்கள் இருக்கவேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் அணியின் உப தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ராவிடம் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்ற ஜஸ்ப்ரிட் பும்ரா மேலும் கூறுகையில்,

‘தலைவராக அணியை வழிநடத்துவது பெருமை தரும் விடயம் ஆகும். இது ஒரு பாக்கியம். இதனை பதவி என்பதைவிட பொறுப்பாக எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்குப் போன்றே என்னிடமும் ஒரு தனி பாணி இருக்கிறது.

‘வேகப்பந்துவீச்சாளர்கள் அணித் தலைவர்களாக இருக்கவேண்டும் என நான் எப்போதும் வலியுறுத்திவந்துள்ளேன். அவர்களால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். அணித் தலைவராக பெட் கமின்ஸ் சிறப்பாக செயற்படுகிறார். கடந்த காலங்களில் கபில் தேவ் ஒரு வேகப்பந்துவீச்சாளராக தலைவர் பதவியை சிறப்பாக ஆற்றியிருந்தார். அவர்களது வரிசையில் எனது பயணத்தை நம்பிக்கையுடன் ஆரம்பிக்கவுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் கூறுகையில் தலைமைப் பதவி மூலம் கிடைத்த அனுபவங்கள் தன்னை ஒரு சிறந்த வீரராக பரிணமிக்கச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, 3ஆவது தடவையாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதாக இருந்தால் இந்தத் தொடரில் குறைந்தது 3 போட்டிகளில் வெற்றிபெற்றாகவேண்டும்.

அதேவேளை, நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் என்ற வகையில் அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்கை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கும்.

ஏனெனில் அவுஸ்திரேலியாவின் கடைசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் தொடர் இலங்கைக்கு எதிராக இலங்கையிலேயே நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் தங்களுக்கு இடையில் விளையாடியுள்ள 107 டெஸ்ட் போட்டிகளில் 45 – 32 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கின்றது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மற்றைய போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

  • Related News

    இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர் பிரேம் தாக்கூர்

    டி10 கிரிக்கெட் தொடரில் இலங்கையில் கிரிக்கெட் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியரை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் தொடரில் காலி மார்வல்ஸ்(Galle Marvels) அணியின் இந்திய உரிமையாளர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில்…

    Read More
    லங்கா ரி 10 – கோல்மார்வல் உரிமையாளர் கைது!

    இலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற லங்கா ரி 10 லீக் போட்டியில் கலந்து கொள்ளும் கோல்மார்வல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியர் ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுமாறு வீரர் ஒருவரை கட்டாய படுத்திய வேலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Bonus Terms and Conditions

    Is Playing Online Poker in the UK Safe?

    How to Get Signed Up to the Best Online Casinos in the UK

    Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

    Sensible Medical insurance Preparations

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience