நாடு திரும்பிய கிரிக்கெட் அணி – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு…!!

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது.

இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வந்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு பேருந்தொன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல வீரர்கள் தங்களது சொந்த வாகனங்களில் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இருப்பதாகவும், அவர்களின் சதித்திட்டம் காரணமாக மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அனைத்து தகவல்களையும் 02 நாட்களில் பொது ஊடகங்கள் முன் அறிவித்து இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related News

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

Read More
எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience