இன்றைய வானிலை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த நிலையில், இது வடக்கு – வடமேற்குத் திசையையினூடாக தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் வானிலையில் காணப்படுகின்ற தாக்கமானது இன்று முதல் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்தோடு மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கூறியுள்ளார்.

  • Related News

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

    Read More
    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Bonus Terms and Conditions

    Is Playing Online Poker in the UK Safe?

    How to Get Signed Up to the Best Online Casinos in the UK

    Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

    Sensible Medical insurance Preparations

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience