அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்னும் சில நாட்களில் பதவியில் இருந்து விலகிச் செல்லவேண்டிய நிலையில், தனது பதவியின் இறுதி காலத்தில் சுமார் 1,500 பேருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைகளை அவர் குறைத்துள்ளார்.
அத்துடன் 39 பேரை அவர் மன்னித்துள்ளார், இந்தநிலையில், நாட்டின் வரலாற்றில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கருணை செயல் என்று வெள்ளை மாளிகை இதனை விபரித்துள்ளது.
இதன்படி நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 1,500 பேரின் தண்டனைகளையும் மாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். .
சுட்டவிரோதமாக துப்பாக்கியை கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த தமது மகனான, ஹண்டரை மன்னித்த இரண்டு வாரக்காலத்தில், இந்த மன்னிப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளார் . எனினும் பைடனின் இந்த செயலை குடியரசுக் கட்சியினர் கண்டித்துள்ளனர்.
மகனின் மன்னிப்பை மூடி மறைப்பதற்காக அதிகமானோரை மன்னிக்கும் திட்டத்தை அவர் செயற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப எதிர்வரும் ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இதனையடுத்து, பைடனின் இந்த மன்னிப்பு திட்டம் மீண்டும் அரசியலாக்கப்படுமா என்பது குறித்து தெளிவான கருத்துக்கள் வெளியாகவில்லை.