
கொழும்பு பல்கலைகழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கை பீடமாக மாற்றுவதற்கு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை, பொது சுகாதார மற்றும் குடும்ப மருத்துவ துறையாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.