மேடையிலேயே இப்படியா?; ஜெர்மனி பெண் அமைச்சருக்கு முத்தமிட முயன்ற குரேஷியா அமைச்சர் – ஒரே பரபரப்பு..!!

ஐரோப்பிய யூனியன் நாடுகள் அவ்வப்போது ஒன்றிணைந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த மாநாட்டுக்கு ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டுக்கு வந்தவர்களை ஜெர்மனி வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் அன்னாலெனா பேர்போக் வரவேற்றார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று மேடையில் புகைப்படம் எடுத்து கொள்ள முயன்றனர்.

இந்த வேளையில் குரேஷியா நாட்டின் 65 வயது நிரம்பிய வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன் முகம் சுளிக்கும் வகையிலான செயலை செய்தார். அதாவது அவரை வரேவற்ற ஜெர்மனி பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்போக்கினிடம் கைக்குலுக்கியதோடு, கன்னத்தில் திடீரென முத்தமிட முயன்றார். இதனால் அன்னாலெனா பேர்போக் அதிர்ச்சியடைந்து விலகினார்.

இந்த சம்பவத்தால் அன்னாலெனா பேர்போக் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுபற்றி குரேஷியா வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன் கூறுகையில், ‛‛சக ஊழியரிடம் அன்பான முறையில் தான் நடந்து கொண்டேன். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்னவென்று தெரியவில்லை” என்றார். இதற்கு குரோஷிய பெண் உரிமை ஆர்வலர் ராடா போரிக் கூறுகையில், ‛‛கோர்டன் கிர்லிக் ராட்மேன் நடத்தை என்பது மிகவும் பொருத்தமற்றதாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

Related News

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிசாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை…

Read More
தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலி!

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பரவிய நிலையில் 6 பேரை மருத்துவமனைக்கு கொண்டு…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience