சுவிஸ் – கனடா நாட்டு தலைவர்கள் சந்திப்பு..!!

கனடாவுக்கு முதல் முறையாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் பயணம் மேற்கொண்டார். அங்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கனடா மற்றும் சுவிஸ் நாடுகளின் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதம் செய்தார்.

அத்துடன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் தற்போதைய நெருக்கடிகளின் சூழலில் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிப்பதை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் விவாதித்ததாக அலைன் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தனது பதிவில் சுவிஸ் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர், ‘அலைன் பெர்செட்டும் நானும் இன்று காலை சந்தித்தோம். கனடா – சுவிட்சர்லாந்து கூட்டாண்மை, உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மக்களின் வாழ்க்கையை சிறந்ததாக்க நாங்கள் செய்து வரும் பணிகள் பற்றி பேசினோம். அலைன், உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி – தொடர்ந்து ஒன்றாக பணியாற்றுவோம்’ என கூறியுள்ளார்.

Related News

காசாவிலிருக்கும் சுவிஸ் நாட்டவர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

இஸ்ரேல் காசா போர் தொடரும் நிலையில், காசாவிலிருக்கும் வெளிநாட்டவர்களும், படுகாயமடைந்த பாலஸ்தீனர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். காசாவுக்கும் எகிப்துக்கும் இடையிலிருக்கும் ரஃபா என்னும் பகுதி வழியாக அவர்கள் எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். பல்வேறு நாடுகள், எகிப்திலிருக்கும் தங்கள் குடிமக்களை தத்தம்…

Read More
கனேடிய பிரதமர் அமெரிக்காவிற்கு விஜயம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஆசியான்)…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!