கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடி கைது..!!

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போலியான விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பங்களாதேஷ் பிரஜைகளை நேற்று (06) பிற்பகல் குடிவரவு எல்லை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் 41, 37 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து வருகை விசா மூலம் இலங்கை வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு செல்வதற்காக நேற்றையதினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து, விமான நிலைய அனுமதி நடவடிக்கைகளுக்காக அவர்கள் சமர்ப்பித்த விசாக்கள் மற்றும் பிற ஆவணங்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவற்றை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், இந்த மலேசிய விசாக்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

Related News

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

Read More
எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!