கேகாலை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரலிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ருவன்வெல்ல பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகவும் 41
வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்பபிடுகிறது.
கொலை சம்பவத்திற்க்கு காரணமான சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.