நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக
பதுளை – எல்ல , பசறை , ஹாலிஎல
கண்டி – மெததும்பர
மேலும்
பதுளை – ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.