அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்னல் தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
65வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் நேற்றைய தினம் வயலில் உழுதுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.