
தென் கொரியாவில் ஜெஜீ தீவிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படகில் 16 தென்கொரியர்கள் மற்றும் 11 வெளிநாட்டவர்களும் பயணித்ததாக கூறப்படுகிறது.
மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களை மீட்க கடலோர காவல்படை, காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் இராணுவம் ஆகியவற்றின் 11 கப்பல்கள், 9 விமானங்கள், 13 கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.