பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான் – உறுதியான தகவல்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. என்னதான் இந்நிகழ்ச்சி ஒருபக்கம் சர்ச்சைகளை கிளம்பினாலும் மறுபக்கம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார்.

சக பெண் போட்டியாளர்கள் பிரதீப்பின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை கூறி பிரதீப்பிற்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர்.

இந்நிலையில் மாயா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் என்பதால் அவர் நாமினேஷனில் இடம்பெறவில்லை. ஆனால் பூர்ணிமா இந்த வாரம் நாமினேஷனில் இடம்பிடித்தார். இதையடுத்து ரசிகர்கள் அவர்களின் கோபத்தை பூர்ணிமா மீது வாக்குகளின் மூலம் காட்டிவிட்டனர். கடந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களின் பூர்ணிமா தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியான இடத்தில ஐஷு உள்ளார். இந்நிலையில் இந்த வாரம் பூர்ணிமா தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் கடைசியில் ஏதேனும் ட்விஸ்ட் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்நிலையில் ஐஷு பிக் பாஸ் வீட்டில் நடந்துகொள்ளும் விதம் அவர்களின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றும், அவர்கள் ஐஷுவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றும்படியும் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!