இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 10 வீதத்தில் அதிகரிப்பு!

அமெரிக்காவில் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் ஓபன் டோர்ஸ் ( Open Doors ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான Open Doors Report on International Educational Exchange அறிக்கையின் வெளியீட்டை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. உலகத் தரமான கல்வியைத் தேடும் இலங்கை மாணவர்களுக்கு இது ஒரு நற்செய்தியாகும் மற்றும் இரண்டு நாடுகளுக்கிடையேயான வலுவான கல்வி உறவுகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமெரிக்கத்தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1.12 மில்லியன் சர்வதேச மாணவர்களை அமெரிக்கா வரவேற்றதை வெளிப்படுத்துகிறது. இது அமெரிக்காவை உயர் கல்விக்கான முன்னணி இடமாக உறுதிப்படுத்துகிறது. மேலும், EducationUSA பெயரில் உலகளாவிய கல்வி ஆலோசனை வலையமைப்பு 25ஆவது ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க தூதர் ஜூலி சங் கருத்து தெரிவித்த போது,

“அமெரிக்காவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தில் அதிகரித்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களுக்கு உலகத் தரமான கல்வி, முன்தோற்றமான ஆராய்ச்சி என்பவற்றை வழங்குகின்றது. இவ்வளர்ச்சி, அமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையிலான கல்வி ஒத்துழைப்பின் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. EducationUSA போன்ற திட்டங்கள் மூலமாக, இந்த கலாசார பரிமாற்றத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை ஆதரிப்பதற்கு முயற்சி செய்கிறோம்.” என்றார்.

  • Related News

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

    Read More
    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!