
நாட்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் சப்ரகமுவ, மேல் மற்றும் தென்காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசுவதுடன் மிதமான அலையுடன் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.