அருந்ததியர் பற்றி சர்ச்சை பேச்சு – ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்..!!

தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக, கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகம் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது விஜயநகரப் பேரரசு ஆட்சியில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என பேசியிருந்தார். அதாவது ஆந்திராவில் இருந்து வந்து குடியேறியவர்கள் அருந்ததியர்கள் என சீமான் பேசியிருந்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பட்டியலின அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், ஐபிசி 153B(1)(c) 505(1)(c), 506(1) உட்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது. இதன்படி கடந்த மாதம் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கில் ஜாமின் கோரி ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து அக்டோபர் 30ஆம் திகதி ஆஜராக உத்தரவிடப்பட்டது. அன்றைய தினம் சீமான் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி ஆஜராகவேண்டும் என சீமானுக்கு ஈரோடு கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து இன்று ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகியுள்ளார்.

Related News

யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

Read More
இறுதி தீர்ப்பு இறைவன் கையில் – மேல்முறையீட்டு மனு குறித்து விரக்தியாக பேசிய ஓபிஎஸ்…!!!

தமிழ்நாடு மதுரை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறை, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கும் துறைதான் கூட்டுறவுத் துறை. இந்த…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!